2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கல்முனையின் 926 பேருக்கு டெங்கு

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கல்முனைப் பிராந்தியத்தில், ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை 926 பேர், டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனரென, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

இம்மாதம் 07ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரையான ஒரு வார காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 67 பேர், டெங்குத்  தாக்கத்துக்குள்ளாகியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

அதிகமாக பாதிப்புக்குள்ளான ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 15 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அக்கரைப்பற்றில் 11 பேரும், பொத்துவில் பகுதியின் 15 பேரும், அட்டாளைச்சேனையில் 11 பேரும், திருக்கோவிலில் நால்வரும், கல்முனை வடக்கில் நால்வரும், காரைதீவில் மூவரும், நிந்தவூரின் இருவரும், கல்முனை தெற்கில் இருவரும் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X