Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 11 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஸ்லாமாபாத் வீட்டுத்திட்ட குடியிருப்பில், இன்று (11) அதிகாலை 1 மணியளவில், இனந்தெரியாதோரால் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இத்தாக்குதலில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டுத்திட்ட குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்முனை பெரும் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளான பகுதியை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை மாநகர உறுப்பினர் எம்.ஐ.எம். அப்துல் மனாப் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த பிரதேசத்தை அண்டிய பகுதியில், இம்மாதம் 9ஆம் திகதி மாலை இரு சமூகங்களுக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago