2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கல்முனையில் வாகனங்களை பதிவு செய்யுமாறு கோரிக்கை

Editorial   / 2019 ஜூலை 24 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் சேவையில் (Hire) ஈடுபடுகின்ற முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் கல்முனை மாநகர சபையில் பதிவு செய்யப்பட வேண்டுமென தெரிவித்துள்ள கல்முனை மாநகர முதல்வர்,

பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில் தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு என்பவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபுடன் கல்முனை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் நடாத்திய கலந்துரையாடலின்போதே எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.

இதன் பிரகாரம் கல்முனை மாநகர சபை எல்லைக்குள் வாடகைக்கு சேவையில் (Hire) ஈடுபடுகின்ற முச்சக்கர வண்டிகள், வான்கள், லொறிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் கல்முனை மாநகர சபையில் உடனடியாக பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் கல்முனை மாநகர சபையில் இதற்காக விசேட கரும பீடம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
வாகனங்களின் உரிமையாளர்கள் அல்லது பாவனையில் வைத்திருப்போர் அவ்வாகனங்களின் புத்தகங்களுடன் மாநகர சபைக்கு வருகைதந்து இக்கருமபீடத்தில் கட்டணம் எதுவுமின்றி இலவசமாக வாகனங்களை பதிவு செய்து கொள்ள முடியும் எனவும் இவ்வாறு பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மாநகர சபையினால் பதிவிலக்கம் ஒன்று வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை,  பொலிஸ் சோதனைகளின்போது குறித்த வாகனங்கள், கல்முனை மாநகர சபையில் பதிவு செய்யப்பட்டதற்கான இப்பதிவிலக்கத்தை காண்பிப்பது அவசியம் என கல்முனை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.ஹேரத் வலியுறுத்தியுள்ளார்  என முதல்வர் ஏ.எம்.றகீப் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .