2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கல்முனை பஸ் நிலையத்தில் பதற்றம்; மேயரின் தலையீட்டால் தீர்வு

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2019 ஏப்ரல் 03 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கல்முனை பிரதான பஸ் நிலையத்தில், அரச மற்றும் தனியார் பஸ் நடத்துநர்களிடையே இன்று (03) மதியம் ஏற்பட்ட முரண்பாடு, கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்பின் தலையீட்டால் சுமூகமாகத் தீர்த்துவைக்கப்பட்டுள்ளது.

பஸ்களைத் தரித்து வைப்பதில் இரு தரப்பினரிடையேயும் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டிருந்ததுடன், பஸ்கள் எவையும் சேவையில் ஈடுமடாமல் முடக்கப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து, இரு தரப்புப் பிரதிநிதிகளையும் கல்முனை மாநகர சபைக்கு அழைத்த மேயர், ஆணையாளர் ஏ.எம்.அன்சாரின் பங்கேற்புடன் அப்பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினைகளை ஆராய்ந்தார்.

இதன்போது மேயர் முன்வைத்த தீர்வை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டு, சுமூக நிலைக்குத் திரும்ப இணக்கம் தெரிவித்தனர்.

இதன்பிரகாரம், குறித்த பஸ் நிலையத்தின் வடக்குப் பகுதியை, இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களுக்கும் தென் பகுதியை, தனியார் பஸ்களுக்கும் ஒதுக்குவதற்கும் அதனை சரியாக எல்லையிடுவதற்கும் இனிவரும் காலங்களில் எவரும் எல்லையை அத்துமீறும் வகையில் பஸ்களைத் தரித்து வைப்பதில்லை என்றும் உடன்பாடு எட்டப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X