Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 14 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ், அஸ்லம் மௌலானா
கல்முனை மாநகர சபையின் சபையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்ட பொழிப்பை மீள சமர்ப்பிப்தற்கான விசேட கூட்டம், மாநகர சபா மண்டபத்தில் இன்று (14) பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றது.
இதன்போது மாநகர சபையின் மேயர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப், 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது தடவையாக மீண்டும் வரவு - செலவுத் திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இதில் வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 16 வாக்குகளும் எதிராக 25 வாக்குகளும் அளிக்கப்பட்டதன. 08 மேலதிக வாக்குகளால் கல்முனை மாநகர சபையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் மீண்டும் தோல்வியுற்றது.
கடந்த மாதம் 26ஆம் திகதி, கல்முனை மாநகர சபையின் சபையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டப் பொழிப்பை மாநகர சபை மேயர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப், சபைக்கு முன்வைத்தார். அப்போது 7 மேலதிக வாக்குகளால் 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் (முஸ்லிம் காங்கிர்ஸ் கட்சியின் பட்டியல் ) -12 பேரும் , தமிழர் விடுதலைக் கூட்டணியின்- 02 உறுப்பினர்களும், சுயேட்சை குழு சார்பாக – 02பேரும் 16 பேர் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவளித்து வாக்களித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் - 7 பேரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்-5 உறுப்பினர்களும், சுயேட்சைக் குழு - ( தோடம்பழச் சின்னம்) -9 பேரும், நல்லாட்சிக்கான தேசிய முன்னனி-01, தேசிய காங்கிரஸ்-01, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்(1) தமிழர் விடுதலைக் கூட்டணி-01 என 25 பேர், வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தனர்.
வரவு - செலவுத் திட்டத்தின் வாக்களிப்பில் சகல உறுப்பினர்களும் இன்றைய தினம் கலந்துகொண்டனார்.
2018 ஆண்டு நடைபெற்ற மாநகர சபைத் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கு 41 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
வாக்கெடுப்பை தொடர்ந்து சபை முதல்வர் இரண்டு தடவைகளும் 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட முன்மொழிவு தோல்வியுற்று அருப்பதால் 19ஆவது திருத்தச் சட்டத்தின் 2015ஏ பிரிவுக்கு அமைய, மாநகர மேயருக்கு இருக்கும் தற்துணிவு அதிகாரத்தின் பிரகாரம் 2019ஆம் நிதி ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் மக்களின் சேவை, தேவைக்கு அமைய நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது என அறிவித்து கூட்டத்தை நிறைவு செய்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
58 minute ago
1 hours ago
3 hours ago