Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 ஜனவரி 28 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா, பாறுக் ஷிஹான், ஏ.எல்.எம்.ஷினாஸ்,றாசிக் நபாயிஸ், எஸ்.அஷ்ரப்கான்
கல்முனை மாநகர சபையின் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் கே.செல்வராசாவை, நேற்றை சபை அமர்விலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டதுடன், அடுத்த சபை அமர்வில் கலந்து கொள்வதற்கும் தடை விதிப்பதாக மாநகர மேயர் அறிவித்துள்ளார்.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு, நேற்று (27) பிற்பகல் நடைபெற்ற போது, வழமையான சபை நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடப்பு ஆண்டுக்கான நிலையியல் குழுக்களுக்குரிய அங்கத்தவர்கள் தெரிவு இடம்பெற்றது.
இதன்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கங்களின்போது சபையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார் என்று குற்றாஞ்சாட்டப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் கே.செல்வராசாவை சபையில் இருந்து வெளியேறுமாறு மேயர் பணித்ததுடன், அடுத்த மாத சபை அமர்விலும் அவர் பங்கேற்க முடியாது என்று உத்தரவிடுவதாக அறிவித்தார்.
எனினும் ,சபையில் இருந்து வெளியேற மறுப்புத் தெரிவித்த குறித்த உறுப்பினரை உடனடியாக வெளியேற்றுமாறு படைக்கலச் சேவிதருக்கு மேயர் உத்தரவிட்டார்.
இதன்போது, எதிரணியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் படைக்கல சேவிதரால் அந்த உறுப்பினர் வெளியேற்றபடுவதை தடுக்கும் வகையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பொலிஸார் சபைக்குள் பிரவேசித்து, குறித்த உறுப்பினரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டபோது சபையில் அமளிதுமளி ஏற்பட்டது.
இதையடுத்து மேயர், சபை அமர்வை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்து, சபையை ஒத்திவைத்தார்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago