2025 மே 12, திங்கட்கிழமை

கல்முனை மாநகர சபையில் நவீன வசதிகளுடன் புதிய கட்டடம்

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கல்முனை மாநகர சபைக்கு அனைத்து நவீன வசதிகளும் கொண்ட புதிய கட்டடத்தொகுதி அமைப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் ஏற்பாட்டில், நகரத் திட்டமிடல், நீர் வழங்கல், உயர் கல்வியமைச்சால் 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

மாநகர முதல்வர் செயலகத்தில் இன்று (03) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சுமார் 70 வருட கால பழைமை வாய்ந்த, தற்போதைய மாநகர சபை கட்டடம் முழுதாக அகற்றப்பட்டு, அதே இடத்தில் புதிய கட்டடத் தொகுதி அமைக்கப்படவுள்ளதாகவும் 5,950 சதுர மீற்றர் பரப்பளவில் ஆறு மாடிகளைக் கொண்டதாக இப்புதிய கட்டடத்தொகுதி அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன் நிர்மாணப் பணிகள் அடுத்த சில வாரங்களில் ஆரம்பிக்கப்பட்டு, 2021ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்படவுள்ளதாகக் கூறிய அவர், மாநகர சபை நிர்வாக அலுவலகம், முதல்வர் செயலகம், சபா மண்டபம், கேட்போர் கூடம், வாகனத் தரிப்பிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடனும் இக்கட்டடத் தொகுதி அமைக்கப்படவுள்ளதென்றார்.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி. முன்னிலையில், நகரத் திட்டமிடல் அமைச்சின் கேப்போர் கூடத்தில் கடந்த வாரம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X