2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கல்முனை மாநகர சபை ஆணையாளராக சிவலிங்கம்

Princiya Dixci   / 2022 மார்ச் 31 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக பொறியியலாளர் என்.சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம், ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தால் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கல்முனை மாநகர சபையில் நாளை வெள்ளிக்கிழமை (01) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக அவர் பொறுப்பேற்கவுள்ளார்.

சிவலிங்கம், இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட உறுப்பினராவார்.

கல்முனை மாநகர ஆணையாளராக செயற்பட்ட ஏ.சீ. அன்சார், கிழக்கு மாகாண பிரதம செயலாளரின் அலுவலகத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .