Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
அஸ்லம் எஸ்.மௌலானா / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், நகரத் திட்டமிடல், அபிவிருத்தி தொடர்பான பயிற்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அடுத்த வாரம் கொரியா பயணமாகின்றார்.
இம்மாநாடு, கொரியாவின் கெங்வொன் நகரில் அமைந்துள்ள சர்வதேச நகரத் திட்டமிடல் பயிற்சி நிறுவனத்தில் இம்மாதம் 20ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி வரை யூ.என்.ஹெபிடாட் நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெறவுள்ளது.
இதற்காக ஆசியா, பசுபிக் நாடுகளில் இருந்து 25 பிரதிநிதிகள் குறித்த விடயம் தொடர்பிலான ஒன்லைன் நேர்முக சமர்ப்பணத்தின் மூலம் தகுதி அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, இலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் சார்பில் கல்முனை மாநகர மேயர் ஏ.எம்.றகீப், இப்பயிற்சி மாநாட்டுக்காக தெரிவு செய்யப்பட்டு, அதற்கான புலமைப் பரிசிலைப் பெற்றுள்ளார்.
இவர், கடந்த ஓகஸ்ட் மாதம் அவுஸ்திரேலியாவின் ஆர்.எம்.ஐ.ரி. பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைகளின் சொத்து நிர்வாகம், ஸ்மார்ட் சிட்டி கட்டுமாணம், திண்மக் கழிவகற்றல் சேவை மற்றும் நிலைபேறான அபிவிருத்தி போன்ற விடயங்களை உள்ளடக்கிய இரு வார கால செயலமர்வில் பங்குபற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago