2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கல்வி, தொழில் வழிகாட்டல்: இலவசக் கருத்தரங்கு

வி.சுகிர்தகுமார்   / 2020 ஜனவரி 30 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்துவரும் கோளாவில் மக்கள் அபிவிருத்தி மய்யம், இளைஞர், யுவதிகளுக்கான கல்வி, சிறந்த தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் முயற்சியை முன்னெடுத்துள்ளது.

இதற்கமைவாக, ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் நாளை (31) காலை 9 மணிமுதல் நண்பகல் 1 மணிவரை மாபெரும் இலவசக் கல்வி, தொழில் வழிகாட்டல் கருத்தரங்கை நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வது எப்படி, பரீட்சைப் பெறுபேற்றை கொண்டு, அடுத்து என்ன செய்வது போன்ற இளைஞர், யுவதிகளின் பல கேள்விகளுக்கும் இக்கருத்தரங்கில் தீர்வு வழங்கப்படவுள்ளன.

மேலும், “தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களும் கல்வி வாய்ப்புகளும்”, “தொழில் வழங்குநர்களும் தொழில் தேடலும்”, “பல்கலைக்கழகக் கல்விப் பாடநெறிகளும் தெரிவும்”, “நேர்மனப்பாங்கும் கற்றல் ஊக்குவிப்பும்” ஆகிய தலைப்புகளில் இக்கருத்தரங்குகளும் நடைபெறவுள்ளன.

ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர், யுவதிகளின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிப்பதற்கான படிக்கல்லாக அமையவுள்ள இக்கருத்தரங்கில், அனைத்து இளைஞர், யுவதிகளும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு, மக்கள் அபிவிருத்தி மய்யம் கேட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X