Kogilavani / 2017 செப்டெம்பர் 15 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
இலங்கை கல்வி நிர்வாக சேவையின் மூன்றாம் வகுப்புக்கு, உத்தியோகத்தர்களை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை, எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ளதாக, கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி புத்திக கமகே தெரிவித்தார்.
நாடு தழுவிய ரீதியில் அதிபர் சேவையின் முதலாம் வகுப்பை சேர்ந்த 112 பேர், சேவைமூப்பு மற்றும் திறமை அடிப்படையில் இந்நேரமுகப் பரீட்சைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கள மொழிமூலம் 107 பேரும் தமிழ் மொழி மூலம் 05 பேரும் நேர்முகப் பரீட்சைக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களுள் வடக்கு, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களில் இருந்து தலா ஒருவரும் மலையகத்தில் இருவரும் தமிழ்மொழி பேசும் சிறுபான்மையினர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை அடிப்படையில், இலங்கை கல்வி நிர்வாக சேவையின் மூன்றாம் வகுப்புக்கு தெரிவுசெய்யப்பட்டோருக்கு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நியமனம் வழங்கப்படும் எனவும், அவர்களது பெயர் விபரங்கள் கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் அடுத்தவாரம் வெளியிடப்படும் எனவும், கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி புத்திக கமகே மேலும் தெரிவித்தார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago