Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
நகர திட்டமிடல், நீர்வழங்கல் அமைச்சின் 26 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள கல்முனை நகர பொதுச்சந்தை புனரமைப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடல், இன்று வெள்ளிக்கிழமை கல்முனை மாநகர சபையில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் நடைபெற்றது.
கல்முனை மாநகரசபை ஆணையாளர் ஜே.லியாகத் அலியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கல்முனை பிரதேச செயலாளர் முஹம்மட் கனி, மாநகர சபையின் பொறியியலாளர் ரி.சர்வானந்தன், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், கல்முனைக்குடி முஹைதீன் ஜூம்மாப் பெரிய பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் மற்றும் சந்தை வர்த்தக சங்கத்தின் சலீம் ஹாஜியார் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது சந்தை புனரமைப்பு பணியை அவசரமாக ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், அத்திட்டத்தை மேற்கொள்வதிலுள்ள தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இப்புனரமைப்பு பணியானது வர்த்தகர்களின் விருப்பப்படியே மேற்கொள்ளப்படும் எனவும் அதன்போது எவ்வித திணிப்புகளும் மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் உறுதியளித்தார்.
அதேவேளை இப்புனரமைப்பு பணி துரிதகதியில் செய்து முடிக்கப்பட வேண்டும் எனவும் அதற்கு தாம் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
3 hours ago