Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
கல்முனை நகரில் அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சாய்ந்தமருது சுபீட்சம் சமூக நற்பணி மன்றத் தலைவர் எம்.ஐ.எம்.அன்சார் மற்றும் செயலாளர்; ஏ.ஆர்.அஷ்பாக் அஹமட்டும் கையொப்பமிட்டு, சுகாதாரப் பிரதியமைச்சர் பைஷால் காசீமுக்கு இன்று திங்கட்கிழமை கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.
அக்கடிதத்தில், 'அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்தில் 'அரச ஒசுசல' இல்லாமை குறையாக உள்ளது. கரையோரப் பிரதேசத்திலுள்ள மக்கள் மருந்துகளை தனியார் மருந்தகங்களில் கொள்வனவு செய்வதுடன், இவ்வாறு கொள்வனவு செய்வதற்கு அதிகளவில் பணம் செலவாகின்றது. இதனால் நடுத்தர, ஏழை வர்க்கத்தினர் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர். எனவே, மக்களின் நலன் கருதி 'அரச ஒசுசலவை நிறுவவேண்டிய தேவையுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'மேலும், 'அரச ஒசுசலவை ஆரம்பிப்பதற்கு பொருத்தமான இடம் கல்முனை நகரமாகும். காரணம் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில், நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனைக்குடி, பாண்டிருப்பு, மருதமுனை, நற்பிட்டிமுனை, மணற்சேனை, மத்திய முகாம் அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் நீலாவணை, கல்லாறு, களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேசங்களும் கல்முனை நகரை அண்மித்த பிரதேசங்களாக இருப்பதலாகும். இங்கு அரச ஒசுசலவை நிறுவும் பட்சத்தில் மக்கள் உச்சப் பயனடைவார்கள்.
எனவே, மக்களின் நன்மை கருதி கல்முனை நகரில் 'அரச ஒசுசலவை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 minute ago
8 minute ago
32 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
8 minute ago
32 minute ago
32 minute ago