Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Suganthini Ratnam / 2016 மார்ச் 16 , மு.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
கல்முனைப் பிராந்தியத்தில் சுகாதாரத்துறையை அபிவிருத்தி செய்யும் வகையில் பிராந்திய சுகாதார பணிமனையை தகவல் மையத்தொகுதியுடன் இணைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அப்பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஏ.எல்.அலாவுதீன், இன்று புதன்கிழமை தெரிவித்தார்.
இந்நடவடிக்கை சுகாதார யோசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் கீழ் இரண்டாம் சுகாதாரத்துறை அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். இந்நிலையில், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிராந்தியத்திலுள்ள வைத்தியசாலைகள், சுகாதார வைத்திய அதிகாரிக் காரியாலயங்கள், கிராமோதய சுகாதார நிலையங்கள் ஆகியவை தகவல் மையத்தொகுதியுடன் இணைக்கப்படும்.
சுகாதாரத்துறை சார் தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதுடன், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டத்துக்கான முன்னேற்றத்தைக் கணிப்பிடுவதற்கும் உரிய காலத்தில் அரசாங்கத் திட்டங்கள் இலக்கை அடையும் வகையில் செயற்படுவதற்கும் மேற்படி வேலைத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையுமெனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .