Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 செப்டெம்பர் 30 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லக்கம் தனியார் தோட்டத்தில் 15 வயது பாடசாலை மாணவன் தன் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் திங்கட்கிழமை (29) மாலை 6.30 மணியளவில் நடந்திருக்கலாம் என மக்கள் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.
மாணவன் லக்கம் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 ல் கல்வி பயிலும் மாணவனே, இவ்வாறு தவறான முடிவை எடுத்துள்ளார். குறித்த மாணவன் திங்கட்கிழமை காலை பாடசாலைக்குச் சென்று மாலை 5.00 மணியளவில் வீடு திரும்பி உள்ளதுடன் பக்கத்து வீட்டார் குறித்த மாணவனை வீட்டின் அருகே 6.00 மணியளவில் கண்டதாக தெரிவிக்கின்றனர்.
காலையில் வீட்டிலிருந்து நுவரெலியாவுக்கு சென்று இரவு 7 மணியளவில் வீட்டுக்குத் திரும்பிய அவரது தந்தை, தனது மகனை காணாமல் தேடியுள்ளார். அப்போது ஊர் முழுவதும் தேடி விட்டு தனது வீட்டுக்குத் திரும்பிய தந்தை சமையலறைக்கு அருகில் உள்ள இருட்டு அறையில் தனது மகன் தன் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதை கண்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக பிரதேசவாசிகள் உடனடியாக மஸ்கெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதுடன் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ் புஷ்பகுமார உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பில். ஹட்டன் பொலிஸ் நிலைய SOCO பிரிவினர், திடீர் மரண விசாரணை அதிகாரி பார்வை இட்ட பின்னர், ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் வந்து பார்வையிட்டார்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் விசாரணைகளை முன்னெடுக்க போவதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
மரணித்த மாணவனின் தாய் கொழும்பு சென்று உள்ளதாகவும் மாணவனுக்கு ஒரு அண்ணனும் நான்கு சகோதரர்களும் உள்ளனர் அவர், வீட்டில் கடைசி பிள்ளை என்று அவரது தந்தை பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
நீதிவான் பார்வை இட்ட பின்னர் சடலம் டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் உடல் கூற்று பரிசோதனை மேற்கொள்ள உள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஷ்பகுமார தெரிவித்தார்.
செ.தி.பெருமாள்
6 minute ago
15 minute ago
40 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
40 minute ago
52 minute ago