Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 பெப்ரவரி 25 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா, பாறுக் ஷிஹான்
கல்முனை மாநகர சபை எல்லைக்குள் மலசல மற்றும் திரவக்கழிவகற்றல் சேவைக்கு அதிக கட்டணம் அறவிடப்படுவதைக் கவனத்தில்கொண்டு, அக்கட்டணத்தை மட்டுப்படுத்தி, நிர்ணயம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மாநகர சபை தீர்மானித்துள்ளது.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு, மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நேற்று (24) பிற்பகல் நடைபெற்றபோதே, இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து பிரஸ்தாபித்த உறுப்பினர் பி.எம்.ஷிபான், தனியாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மலசல கழிவகற்றலுக்காக ஒவ்வொரு வீட்டுக்கும் பெருந்தொகை பணம் அறவிடப்படுவதாக சுட்டிக்காட்டியதுடன், இதனைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.
இது குறித்து சில மாதங்களுக்கு முன் கவனம் செலுத்தப்பட்டு, சம்மந்தப்பட்ட தரப்பினருடன் பேசித் தீர்வு காண்பதற்காக உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் பொறுப்பாக்கப்பட்டிருந்தார் எனத் தெரிவித்த மேயர், அது தொடர்பில் விளக்கமளிக்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டார்.
தான் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து உறுப்பினர் அமீர், சபைக்கு விபரித்ததையடுத்து, இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தேவையான நவடிக்கைகளை விரைவாக முன்னெடுப்பதென தீர்மானிக்கப்பட்டதுடன், விரைவில் அதற்குரிய குழுக்கூட்டமொன்றை நடத்துமாறு மேயர் அறிவுறுத்தினார்.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago