Editorial / 2019 ஒக்டோபர் 30 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா
வீடு சார்ந்த திண்மக் கழிவுகளின் முகாமைத்துவம் தொடர்பாக சாரணர்களை அறிவுறுத்தும் செயலமர்வு, மாவட்ட சாரணர் ஆணையாளர் எஸ்.றவீந்திரன் தலைமையில், அக்கரைப்பறில் நேற்று (29) நடைபெற்றது.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் அதாஉல்லா அகமட் ஸக்கி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியதுடன், அதிதிகளாக அக்கரைப்பற்று-கல்முனை மாவட்ட சாரணர் சங்க தவிசாளர் யூ.எல்.எம்.ஹாசீம், உதவி மாவட்ட சாரணர் ஆணையாளரும், மாவட்ட இணைப்பாளருமான எம்.எப்.றிபாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, கழிவுகள் வளங்கள், இயற்கை உரம், கம்போஸ்ட் தயாரிக்கும் முறை, கழிவுகளை வகைப்படுத்தும் முறை, கழிவுகளை முறையாக வெளியேற்றும் முறை, வீடு சார்ந்த திண்மக்கழிவுகளின் முகாமைத்துவம் தொடர்பாக மக்களை அறிவுறுத்தும் பல்வேறு விடயங்களும் வளவாளர் டொக்டர் றொமன்ஸ் மைக்கலால் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன.
இதேவேளை, அம்பாறை கரையோரப் பிரதேசங்களில் 50 சாரணர் குழுக்கள் அமைக்கப்பட்டு, மருதமுனை தொடக்கம், பொத்துவில் வரையிலான பிரதேசங்களில் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களை விழிப்புனர்வூட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
2 hours ago
2 hours ago