2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

காணாமல்போன நபர் சடலமாக மீட்பு

Editorial   / 2019 ஜனவரி 23 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருக்கோவில் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் முன்பான கடற்கரையோர பகுதியில், இன்று (23)காலை இளைஞர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

இவ்வாறு சடலமாக கரையொதுங்கியவர் அக்கரைப்பற்று கோளாவில் மெதடிஸ்த மிசன் வீட்டுத்திட்ட பிரதேசத்தை சேர்ந்த, 24 வயதுடைய மகாதேவன் கிஷோஜி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் கடந்த 21ஆம் திகதி அக்கரைப்பற்று சின்னமுகத்துவார கடற்கரை பிரதேசத்தில் வைத்து காணாமல் போனதாக உறவினர்கள் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்​றை பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையிலேயே குறித்த இளைஞனை தேடும் பணியில் குடும்பத்தார் ஈடுபட்டுவந்த  நிலையில், இன்று காலை குறித்த இளைஞன் திருக்கோவில் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் முன்பான கடற்கரையோரத்தில்  சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்து குறித்த சடலம் கரையொதுங்கிய இடத்துக்கு விரைந்த பிரிவின் கிராம உத்தியோகத்தர், திருக்கோவில்  பொலிஸாருக்கு தகவலை வழங்கிய நிலையில் பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .