எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஒக்டோபர் 18 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டத்தில், காணி விசேட மத்தியஸ்த சபையை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணியின் தலைவர் பி. கைறுடீன் தெரிவித்தார்.
இது தொடர்பாக, நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரலவுக்கு இன்று (18) அனுப்பிவைக்கப்பட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
காணி விசேட மத்தியஸ்த சபை அமைப்பதற்கான உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு பல மாதங்கள் கடந்த போதிலும், இதுவரை காணி மத்தியஸ்த சபை அமைக்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் விவசாயத்துக்கு வழங்கப்பட்டு பாரம்பரியமாக விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வந்த விவசாயக் காணிகள், யுத்த காலத்தின் பின்னர் வனப்பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு, இராணுவமுகாம், புனிதபூமி, ஏனைய அபிவிருத்தி திட்டங்களுக்கென எடுக்கப்பட்ட காணிகளை உரிய விவசாயிகளுக்கு மீள வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு காணி விசேட மத்தியஸ்த சபையை அமைக்குமாறு, அம்மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பாணாமை, தமண, திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகள், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களால் அபகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த விவசாயிகள் பொருளாதார ரீதியாக பின் தள்ளப்பட்டுள்ளதோடு, இது தொடர்பாக பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை காலமும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தில் விசேட காணி மத்தியஸ்த சபையை ஏற்படுத்துவதால், தமிழ்பேசும் மக்கள் அவர்களது பிரச்சினைகளை இலகுவாகத் தீர்த்துக் கொள்ள முடியுமெனவும், விரைவாக இதற்கான தீர்வை வழங்க முடியுமெவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025