Freelancer / 2025 பெப்ரவரி 16 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
காதல் தொடர்பில் இருந்த இளைஞன் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம், அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் சனிக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் மணல்சேனை கிட்டங்கி வீதி பகுதியைச் சேர்ந்த மதியழகன் சஞ்சய் ( வயது-24 ) தன் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். அவருடைய சடலம் பொலிஸாரினால்மீட்கப்பட்டுள்ளது.
காதல் விவகாரமே தன் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு காரணம் என ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.இந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் அப்துல் ரசீட் முஹம்மது கலீல் கட்டளைக்கமைய குறித்த சடலத்தின் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர் மேற்கொண்டுள்ளதுடன் மூச்சுக் குழாய் இறுகி மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு சடலம் உறவினர்களிடம் மாலை ஒப்படைக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர் தொலைபேசி ஊடாக வெளிநாடு ஒன்றிலுள்ள யுவதி ஒருவருடன் காதல் தொடர்பில் இருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் காலை வேளை உயிரிழந்த இளைஞரின் தாய் தனது உறவினர் வீட்டுக்கு சென்று வந்த நிலையில் தன்னுயிரைஅவ்விளைஞன் மாய்த்துக் கொண்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்
21 minute ago
41 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
41 minute ago
49 minute ago
1 hours ago