Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 ஜனவரி 28 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
கல்முனை சுகாதாரப் பிராந்தியத்திலுள்ள காரைதீவில் மேலும் ஜந்து மாணவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பிணிமனையின் இன்றைய (28) கள நிலைவர அறிக்கையில் இவ்விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (22) காரைதீவிலுள்ள பாடசாலையொன்றில் இரு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, தொற்றுக்குள்ளான மாணவர்களுடன் நெருங்கிப் பழகிய 32 மாணவர்கள், கடந்த திங்கட்கிழமை (25) பிசிஆர் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
நேற்று (27) கிடைத்த இந்தப் பிசிஆர் முடிவுகளின்படி அந்த 32 பேரில் மூன்று மாணவர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
அவர்களை சிகிச்சை நிலையத்துக்கு சுகாதாரத் துறையினர் அழைத்துச் சென்றுள்ளதுடன், அம்மாணவர்களது வீட்டிலுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஏற்கெனவே கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்ட தாதிய உத்தியோகத்தரது பிள்ளைகள் இருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் காரைதீவின் இரு பிரபல பாடசாலைகளைச் சேர்ந்தவர்களாவர். இம்மாணவர்களும் சிகிச்சைக்காகக் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மாணவர்களிடையே கொரோனா தொற்றும் அதனைத்தொடர்ந்த பிசிஆர் சோதனைகள் அனைத்தும் பெற்றோரிடையேயும் மாணவரிடையையும் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.
இதனால் செவ்வாய்க்கிழமை (26) முதல் காரைதீவிலுள்ள பெரும்பாலான பாடசாலைகள் மாணவரின்றி வெறிச் சோடிக் காணப்படுகின்றன. அநேகமான பாடசாலைகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே வருகை தருவதுடன், ஆசிரியர்களின் வருகையும் வீழ்ச்சியடைந்துள்ளதால், கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
காரைதீவுப் பிரதேசத்தில் இதுவரை 69 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளதுடன், சிவப்பு எச்சரிக்கை வலயமாக பிரகடனப்படுத்தி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அறிவித்திருக்கிறது.
35 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
43 minute ago