2025 மே 13, செவ்வாய்க்கிழமை

காரைதீவில் 654 குடும்பங்கள் பாதிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா, பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழையையடுத்து கரையோரப் பிரதேசமான காரைதீவுக் கிராமம் வெள்ளத்தில் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பிரிவுகளுக்கு காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் நேரடியாக விஜயம்செய்து பார்வையிட்டதோடு, வெள்ளம் வடிந்தோடும் வண்ணம் தமது ஊழியர்களை கொண்டு பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.

காரைதீவுக் கிராமத்தில் மட்டும் 654 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 28 குடும்பங்கள் இடம்பெயர்ந்து, உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்திருப்பதாகவும் அவர்களுக்கான உணவுக்கு ஏற்பாடு செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X