Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
வி.சுகிர்தகுமார் / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு கிராமத்தினுடைய அபிவிருத்தி என்பது, அரசியல், அரச அதிகாரிகள், பொதுமக்கள் என, மூன்று தரப்பினரிடமும் தங்கியுள்ளது என்றும் இம்மூன்று தரப்பினரும் இணைந்து, மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்தியைத் திட்டமிடும் போதே, அத்திட்டம் முற்றும்முழுதாக வெற்றியடையும் என்றும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் தெரிவித்தார்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பனங்காட்டு கிராமத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரனால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களைக் கையளிக்கும் நிகழ்வு, பனங்காடு ஜக்கிய கிராமிய அமைப்புக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், நேற்று (15) மாலை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தற்காலத்தில், அரசசேவையில் இணைந்து கொள்ளும் உத்தியோகத்தர்கள், தங்களுக்கு வசதியான தமக்கு அருகிலுள்ள இடங்களில் சேவையாற்ற வேண்டும் எனும் மனோநிலையுடன் இருக்கின்றனர் என்று குறிப்பிட்ட அவர், அவர்களின் மனநிலைக்கேற்றதுபோல் நியமனங்கள் வழங்கப்படும்போது, அதை அவர்கள் முறையாக பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்றும் கோரினார்.
இதேவேளை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தான் பிரதேச செயலாளராக கடமையாற்றிய கடந்த 9 வருடங்களில், அம்பாறை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ள கோடீஸ்வரனின் சேவையை நன்கு அறிந்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கு முன்பே, அவர் பல விடயங்களை மக்களுக்காக பெற்றுக்கொடுத்தவர் என்பதையும் ஞாபகமூட்ட விரும்புவதாகவும் கூறினார்.
8 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
31 minute ago