Editorial / 2020 மே 26 , பி.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

சகா
பாடசாலைகளைத் திறப்பது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அறிவித்ததும் பாடசாலைகளைத் திறப்பதற்கு வசதியாக, கிழக்கில் பரவலாக சிரமதானங்கள் நடைபெற்றுவருகின்றன.
கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர், மாவட்டரீதியாக 1ஏபிசி, 1சி பாடசாலை அதிபர்களுக்கு கொரோனவின் பின்னரான பாடசாலையைத் திறப்பு தொடர்பில் கூட்டங்களை நடத்திவருகிறார்.
அக்கூட்டங்களில் பாடசாலைத் திறப்பிற்கு முன்னர் கொரோனா, டெங்கு நோயிலிருந்து பாதுகாப்பதற்காக பாடசாலைச் சூழல் சுத்தமாக்கப்படவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், பாடசாலை திறப்பது தொடர்பான செய்தி அறிவித்ததும் பாடசாலைகள் கட்டாயம் தொற்றுநீக்கம் செய்யப்படுவதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் கேட்டிருந்தார்.
அதற்கிணங்க, அநேகமான பாடசாலைகளில் தற்போது விளையாட்டுக்கழகங்கள், பொது அமைப்புகள் சிரமதானத்திலீடுபட்டு வருகின்றன. காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலும் விளையாட்டுக்கழகங்கள் சிரமதானத்திலீடுபட்டன.
5 minute ago
15 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
17 minute ago