Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2019 ஜனவரி 13 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படுமென, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உறுதியளித்துள்ளாரென, அம்பாறை மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் ஏ.எச். ஜெஸீர், இன்று (13) தெரிவித்தார்.
ஆளுநரிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய, இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாகவும், பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்குத் திறந்த போட்டிப் பரீட்சைக்கு, கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தோற்றி, சித்தியடைந்துள்ளவர்களுக்கு இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
அத்துடன், ஏனைய வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு, அரச திணைக்களங்களில் வெற்றிடங்களை உருவாக்கி, நியமனம் வழங்கப்படுமெனவும், ஆளுநர் தெரிவித்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் மற்றும் அரச திணைக்களங்களில் நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ள மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு, அம்பாறை மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகள் ஒன்றியம் பாராட்டுத் தெரிவித்துக் கடிதம் அனுப்பி வைத்துள்ளதாகவும், வேலையில்லாப் பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் வேலையில்லாப் பட்டதாரிகள் 2,700 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
34 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago