2025 மே 13, செவ்வாய்க்கிழமை

குடிநீர்ப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொத்துவில் பிரதேசத்தில் நிலவிவரும் குடி நீர் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார நடவடிக்கை எடுத்துள்ளதாக, இராஜாங்க அமைச்சரின்  அம்பாறை மாவட்ட முஸ்லிம் - தமிழ் பிரிவின்  இணைப்பாளர் எஸ்.அப்துல் ஜப்பார் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சின் அம்பாறை மாவட்ட முஸ்லிம் தமிழ் பிரிவின் இணைப்பாளர் காரியாலயம், பொத்துவிலில்  நேற்று (10) திறந்து வைக்கப்பட்டது. இதில் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இணைப்பாளர் எஸ்.அப்துல் ஜப்பார் தொடர்ந்து உரையாற்றுகையில், பொத்துவில் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வேலைத் திட்டங்களையும் வகுத்துள்ளதாகவும் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் விவரமும் இராஜாங்க அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர்  இப்பிராந்தியம் பல அபிவிருத்திகளை அடையவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X