2025 மே 12, திங்கட்கிழமை

குரு பிரதீபா பிரபா விருது

Editorial   / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியாஸ் ஆதம்

கல்வியமைச்சால் அதிபர், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அதியுயர் விருதான குரு பிரதீபா பிரபா விருதுக்காக அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலய ஆசிரியர் ஏ.எல். அஜ்மல் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஆசிரியர்கள், அதிபர்களால் ஆற்றப்படும் உன்னதமான சேவையைக் கருத்திற்கொண்டு கல்வியமைச்சால் வருடாவருடம் இத்தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

அல்-அர்ஹம் வித்தியாலயத்தில் சுமார் 09 வருடங்காலாக பணியாற்றிவரும் ஆசிரியர் அஜ்மல், அப்பாடசாலையில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் சிறப்பாக ஈடுபட்டு வருவதுடன், இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு மாணவர்களை பயிற்றுவித்து வருகிறார்.

இதன்பிரகாரம், குறித்த பாடசாலையில் ஆசிரியர் அஜ்மல் ஆற்றிவரும் சேவை, அர்ப்பணிப்புகளுக்காக குறித்த விருதுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர் அஜ்மல், தனது ஆரம்பக் கல்வியை, தைக்காநகர் ஸஹ்றா வித்தியாலயத்திலும், உயர் கல்வியை, அக்கரைப்பற்று தேசிய பாடசாலையிலும் கற்றார்.

அக்கரைப்பற்று கல்வி வலயத்திலிருந்து குறித்த விருதுக்காக ஆசிரியர்கள் சார்பாக இவர் மாத்திரமே தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X