Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2018 நவம்பர் 27 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை, முஹ்யித்தீன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலின் குர்ஆன் பாடசாலைக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இக் குர்ஆன் பாடசாலைக்காக 6 தொடக்கம் 12 வயதுக்குட்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர் தெரிவுசெய்யப்பட்டு, இலவச கற்கைநெறி வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கல்முனை, முஹ்யித்தீன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலில் புதுமுகப் பாடத்திட்டத்துடன், அல் குர்ஆன் பாடசாலை ஒன்றை நடத்துவதற்கான ஏட்பாடுகளை தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ் தலைமையிலான பரிபாலன சபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
விண்ணப்ப முடிவுத் திகதியாக டிசெம்பர் மாதம் 13ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவங்களை, கல்முனை பெரிய பள்ளிவாசல் காரியாலயத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
அல் குர்ஆனை முறையாக ஓதுவதன் மூலம் எண்ணற்ற சிறப்புக்களையும் இறை நெருக்கத்துக்கான அதிக பங்கையும் கொண்டுள்ள அல் குர்ஆன் ஓதற் கலையில் இஸ்லாமிய பெற்றோர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் எனும் நோக்கில், கல்முனை அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாசபையின் திறமைமிக்க ஆசிரியர்களின் வழிகாட்டலில், இக் குர்ஆன் பாடசாலை, எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்ப பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago