2025 மே 15, வியாழக்கிழமை

குழந்தைகளுக்கான பால்மா வழங்கிவைப்பு

Editorial   / 2020 மே 24 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார் 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தொழிலை இழந்த பல குடும்பங்களின் குழந்தைகள் நலன் கருதி, பால்மா பக்கெட்டுகள் வழங்கும் பணியை,  அக்கரைப்பற்று அன்புக் கரங்கள் இளைஞர் அமைப்பு முன்னெடுத்துள்ளது.

இதன் ஒரு கட்டமாக, மிகவும் பின்தங்கப்பட்ட கிராமமான ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கண்ணகி கிராமம் பிரதேச குழந்தைகளுக்கான பால்மா பக்கெட்டுகள், நேற்று (23) வழங்கப்பட்டன.

புலம்பெயர் உறவுகளின் உதவியோடு பெறப்பட்ட பால்மா பக்கெட்டுகளே இதன்போது வழங்கப்பட்டன.

நிகழ்வில் அன்புக்கரங்கள் அமைப்பின் நிர்வாகத்தினர் கலந்துகொண்டு, பால்மாக்களை வழங்கி வைத்ததுடன், மேற்படி கிராமத்தில் வாழும் மிகவும் வருமானம் குறைந்த மக்களின் வாழ்வாதாரம், அவர்கள் எதிர்கொண்டுள்ள நிரந்தரக் குடியிருப்பற்ற பிரச்சினை தொடர்பிலும் அறிந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .