2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கேட்போர் கூடம் திறந்து வைப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கேட்போர் கூடம், நேற்று (24) வைபவ ரீதியாகத் திறந்துவைக்கப்பட்டது.

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பைசல் காசிமின் முயற்சியின் பயனாக, கல்வி அமைச்சின் நிதியொதுக்கீட்டில், 1,500 இருக்கைகளை கொண்டதாக சகல வசதிகளுடன் குறித்த கேட்போர் கூடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

புதிய மூன்று மாடி வகுப்பறைக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இதன்போது நடைபெற்றது.

அல்-அஸ்ரக் தேசிய பாடசாலையின் அதிபர் ஏ.கபூர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளுக்கு, பைசல் காசிம் எ.பி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, கேட்போர் கூடத்தைத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், பிரதி கல்விப் பணிப்பாளர், உதவி கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்வி பணிப்பாளர், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திக் சங்கத்தினர், பழைய மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X