Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Princiya Dixci / 2021 ஜனவரி 05 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைஷல் இஸ்மாயில்
கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் அம்பாறை - பாலமுனை பிரதேச வைத்தியசாலை கழிவுகளால் நிலக்கீழ் நீர் மாசடைந்து, தமது பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தும், அதனைத் தடுக்க நீதிமன்றத்தின் கட்டளையைப் பெறுவதற்குமாக அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் டிசெம்பர் மாதம் 21ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, நீதிவான் எம்.எச்.முஹம்மத் ஹம்ஸா முன்னிலையில் நேற்று (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இம்மாதம் 26ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணைக்காக எடுக்கப்படும் என்று நீதவான் கட்டளை பிறப்பித்துள்ளார்.
பாலமுனை பிரதேச மக்கள் சார்பில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்ஸில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாலமுனை அமைப்பாளர் ஏ.எல்.எம்.அலியார் மற்றும் எஸ்.ஆப்தீன், ஏ.எல்.ஹஸ்மீர், பி.எம்.ஹுஸைர் அடங்கிய ஐந்து பேரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் குறித்த வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி ஆகியோர்களுக்கு எதிராகவே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
பாலமுனை பிரதேச மக்கள் சார்பில், குரல்கள் இயக்கத்தின் 5 சட்டத்தரணிகளும், பிரதிவாதிகள் சார்பில் 3 சட்டத்தரணிகளும் ஆஜராகியிருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு பிரதிவாதிகள் 4 பேரும் நீதிமன்றுக்கு ஆஜராகியிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
29 minute ago
1 hours ago