2025 மே 15, வியாழக்கிழமை

கொரோனா பாதிப்பு; கோவில் நிர்வாகம் நிதியொதுக்கீடு

Editorial   / 2020 ஜூன் 03 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்  

கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக, அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் கோவில் நிவாகத்தினர் 15 இலட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளனர்.

மேற்படி கோவிலின் வண்ணக்கர் க.கார்த்திகேசு தலைமையிலான நிருவாகத்தினர் மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைவாகவே, இந்த நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கோரிக்கைக்கு அமைவாக, தலா 1000 ரூபாய் பெறுமதியான 1,500 நிவாரணப் பொதிகள் கொள்வனவு செய்யப்பட்டு, பிரதேச செயலகத்தின் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .