2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கொள்கலனுக்குள் போதைப்பொருள் பாவனை

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 02 , பி.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

சுமார் 12 வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்ற நிலையில் வைக்கப்பட்டுள்ள கொள்கலன் ஒன்றுக்குள் போதைப்பொருள் பாவனை இடம்பெற்று வருவதாக, ஓட்டமாவடி பிரதேச சபையின் உப தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை தெரிவித்தார்.

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்துக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள கொள்கலன் ஒன்றுக்குள் போதைப்பொருள் பாவனை இடம்பெற்று வருவதாக உப தவிசாளர் தெரிவித்தார்.

ஓட்டமாவடி புதிய பாலம் அமைக்கும் காலப்பகுதியில் அதன் ஒப்பந்தக்காரர்கள் பயன்படுத்தி கைவிட்ட நிலையிலுள்ள இந்தக் கொள்கலனில் போதைபொருள் பாவனையாளர் அதனை போதைப்பொருள் பாவிப்பதற்கு பயன்படுத்தும் இடமாக ஆக்கியுள்ளனர்.

இவ்வாறு சமூக சீர்கேடுகள் நடக்கும் இடமாக மாறியுள்ள குறித்த கொள்கலனை உடனடியாக அப்புறப்படுத்துமாறு பொதுமக்கள் வேண்டிக்கொள்கின்றனர்.

குறித்த கொள்கலனை பிரதேச சபை நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும் என்று கடந்த பிரதேச சபையின் 34ஆவது அமர்வின் போது தான் கருத்துத் தெரிவித்துள்ளதாக உப தவிசாளர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .