Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 01 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா,பைஷல் இஸ்மாயில்
அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் அஸ்ரப் நகர் கிராமத்தில் நேற்றிரவு(31) காட்டு யானை ஒன்று புகுந்து சேதம் ஏற்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் இன்று(01) தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மைக்காலமாக அஸ்ரப் நகர் கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் இப்பிரதேச மக்களின் உடமைகள் சேதமாக்கப்படுவதுடன் உயிர்களும் காவுகொள்ளப்பட்டு வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.
இதேவேளை, கடந்த வாரம் இதே கிராமத்தைச் சேந்த பெண்னொருவர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவதுடன் நேற்றிரவு(31) அலியார் கமறுதீன் வயது(53) எனும் குடும்பஸ்தரும் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறான நிலை மேலும் தொடரா வண்ணம் உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று இப்பிரதேச மக்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Jul 2025