2025 மே 03, சனிக்கிழமை

காணாமல் ஆக்கப்பட்டோருக்காக

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 29 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு, வி.சுகிர்தகுமார், கனகராசா சரவணன்

மூன்றம்சக் கோரிக்கையை முன்வைத்து அம்பாறை மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில்; இன்று (29) உண்ணாவிரதத்துடன் கூடிய கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோர் விசாரணை செய்யும் காரியாலயத்தைத் திறப்பதற்கு இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட வேண்டும், ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்வைத்த நான்கு கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இனிமேலும் காலம் கடத்தாது எமக்கு  தீர்வு பெற்றுத்தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை இவர்கள் இதன்போது முன்வைத்தனர்.

இதில் கலந்துகொண்டோர் தெரிவிக்கையில், 'இந்த நாட்டில் இன, மத, பேதம் இல்லாது பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவினர்கள் உயிருடன் இருந்தால், அவர்களை விடுதலை செய்யுமாறு கோருகின்றோம். இதேவேளை, எமது உறவுகளை காணாமல் போகச் செய்தவர்களை உடனடியாகக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும்  கோரிக்கை விடுக்கின்றோம்.

இந்தப் போராட்டத்தை அரசாங்கம் கவனத்திற் கொள்ளாவிடின், சாகும் வரையான உண்ணாவிரத்தை நாம் முன்னெடுப்போம்' என்றனர்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசனிடம் மகஜரையும் இவர்கள் கையளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X