2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கோமாரி வைத்தியசாலையை தரம் உயர்த்துமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

பொத்துவில், கோமாரி  வைத்தியசாலையை தரமுயர்த்தல் மற்றும் குறைபாடுகளை நிவர்த்திக்கக்கோரி கோமாரி பொதுமக்களால் நேற்று(25) பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை, போதிய மருந்துகள் இன்மை, சீரற்ற அம்புலன்ஸ் சேவை போன்ற விடயங்கள் உடன் நிவர்த்திக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
கோமாரி மெதடிஸ்த தேவாலயத்துக்கு முன்பாக ஆரம்பித்த ஆர்ப்பாட்டப் பேரணி வைத்தியசாலையை சென்றடைந்நது.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு வருகை தந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசனிடமும் பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் வைத்தியசாலையின் வைத்தியர் உள்ளிட்டவர்களிடம் மகஜர் கையளித்தனர்.

போதியளவு வைத்திய சேவை இன்மையினால் பல உயிர்கள் காவு கொள்ளப்படுவதாகவும் அவ்வாறானதொரு துரதிஸ்ட சம்பவம் அன்மையில் நடைபெற்றதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

7கிராமங்களின் 2800 க்கும்;; மேற்பட்ட குடும்பங்கள்  வைத்திய சிகிச்சை பெறும் இவ்வைத்தியசாலையை அதிகாரிகளால் புறந்தள்ளப்பட்டு வருவதாகவும் மக்கள் குற்றம்; சாட்டினர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X