2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

குளத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

அம்பாறை, இங்கினியாகலை பொலிஸ் பிரிவிலுள்ள வெவ்சிறிகம குளத்திலிருந்து நேற்று வியாழக்கிழமை மாலை குடும்பப் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெவ்சிறிகம, கொக்நகர கிராமத்தைச் சேர்ந்த எம்.ஜி.தினூஷா மல்காந்தி (வயது 27) என்பவரின் சடலமே மீட்கப்பட்டது.

தானும் தனது மனைவியும் சிறிய மகனும் நேற்றுமுன்தினம் புதன்கிழமை வெவ்சிறிகம கிராமத்துக்குச் செல்வதற்காக தோணியில் பயணித்துக்கொண்டிருந்தபோது தோணி கவிழ்ந்தது. குளத்தில் விழுந்த தான் மகனை கைப்பற்றிக்கொண்டு கரைக்கு வந்ததாக இவரது கணவர் தெரிவித்தது.  

மனைவியைத் தான் தேடியதாகவும் ஆனால்,   காணவில்லை. தொடர்ந்து தேடுதல் நடத்தியபோது நேற்றையதினம் அவர் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X