Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
கிழக்கு மாகாணத்தில்; கல்வித்தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.
இறக்காமம் மதீனா வித்தியாலயத்தில் சனிக்கிழமை (03) நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வில் உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இம்மாகாணத்தில் கல்வித்தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் முதலமைச்சரும் கல்வி அமைச்சரும் உறுப்பினர்;களும் கூடிய கவனம் செலுத்திவருகின்றனர்' என்றார்.
'மேலும் பல்வேறு சமூகங்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் என்ற பேதம் இல்லாமல் கிழக்கு மாகாணத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்வதற்காக ஒரு தேசிய மாகாண அரசை உருவாக்கி செயற்பட்டு வருகின்றோம்' எனவும் அவர் தெரிவித்தார்.
'சகோதரச் சமூகமான தமிழ்ச் சமூகம் தற்போதைய ஆட்சியின் பங்காளர்;களாக வந்திருக்கின்றனர். அதிலும் மிக முக்கியமான கல்வி அமைச்சுப் பொறுப்பு தமிழ்ச் சமூகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தக் கல்வி அமைச்சும் திறமையானவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
கல்வி அமைச்சரும் கல்விச் சமூகத்தின் நிலையை நன்கறிந்தவர். அவருடன் சேர்;ந்து கல்வி மேம்பாடு தொடர்பான வேலைகளைச் செய்வது மிக இலகுவாக இருக்கும். கல்வி அமைச்சருடன் சேர்ந்து கிழக்கு மாகாணத்தில் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு என்னாலான உதவிகளைச் செய்வேன்' எனவும் அவர் கூறினார்.
12 minute ago
12 minute ago
25 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
12 minute ago
25 minute ago
36 minute ago