எம்.எஸ்.எம். ஹனீபா / 2019 ஜனவரி 04 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, பொத்துவில், அறும்பைப் பிரதேசத்தில் சகோதரரின் கத்தக்குத்துக்கு இலக்காகி, 24 வயது இளைஞர் ஒருவர், நேற்றிரவு (03) 10 மணியளவில் உயிரிழந்துள்ளாரெனப் பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்பத் தகராறு காரணமாக குறித்த சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில், தம்பியே குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
பொத்துவில் 05ஆம் பிரிவைச் சேர்ந்த முஹம்மது இப்றாஹிம் முஹம்மது ஜெலீல் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளாரெனவும் சடலம், பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .