Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 செப்டெம்பர் 15 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராஜன் ஹரன்,எம்.எஸ்.எம். ஹனீபா,-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகம்பே பாலத்தினுள் ஆணின் சடலமொன்று இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
ஹிக்கடுவையைச் சேர்ந்த இலண்டன் பிரஜையான விசாந்த சுப்பரமணியம் (வயது 24) என அடயாளம் காணப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் நேற்று திங்கட்கிழமை பொத்துவில் அறுகம்பையிலுள்ள 'லோங்க் பீச்' எனும் சுற்றுலா விடுதியின் இரண்டாம் இலக்க அறையில் இவர் தனியாகவே தங்கியிருந்துள்ளார்.
இவர் தங்கியிருந்த அறையிலிருந்து கைக் கடிகாரம் ஒன்றும் இலங்கைப் பணம் 41 ஆயிரம் ரூபாவும் 10 கிராம் அபின் போதைப் பொருளும் கொமர்சியல் வங்கி விசா கிரடிற் கார்ட்டும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டெடுக்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
55 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago