பைஷல் இஸ்மாயில் / 2018 ஜனவரி 15 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

“உலக சந்தையில் வெடிகுண்டை மிக இலகுவாகவும், விலை குறைவாகவும் பெற்றுக்கொள்ள முடிகின்றது. ஆனால், எமது நாட்டில் தேங்காயை பெற்றுக்கொள்ள மிகக் கடினமாகவும் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைமையே தற்போது காணப்படுகின்றது” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன தெரிவித்தார்.
சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியிலுள்ள பொது ஜன பெரமுன கட்சியின் தலைமை வேட்பாளர் எம்.எம்.ஏ.காதரின் காரியாலயத்தில், நேற்று (14) இடம்பெற்ற மக்களுடனான சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எமது மக்கள் இதுவரை என்ன பலன்களை அனுபவித்துள்ளார்கள்? கஷ்டங்களைத் தவிர வேறு ஒன்றையும் அனுபவிக்கவில்லை. ஆகக் குறைந்தது ஒரு தேங்காயைக் கூட வாங்க முடியாதவர்களாகவே நாம் காணப்படுகின்றோம்.
“இந்த தேர்தலை உலக நாடுகள் உற்று நோக்குவதாகவும், அதன் மூலம் உலக நாடுகள் எமக்கு பல கோடிக்கணக்கான உதவிகளைச் செய்யப்போவதாகவும், அதற்காக இந்த தேர்தலை நாம் ஒரு எடுத்துக்காட்டாக வெற்றிவாகை சூடவேண்டும் என்று, பொய்யான பிரசாரங்களை மக்கள் மத்தியில் செய்து வருகின்றனர்.
“மக்களாகிய நாம் இவர்களின் பொய்யான கதைகளை இனிமேலும் நம்பி ஏமாறாமல் இருக்க வேண்டும்” என்றார்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025