Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அஸ்லம் எஸ்.மௌலானா / 2020 ஜனவரி 09 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 40 வருட காலம் பழைமை வாய்ந்த கல்முனை மாநகர பொதுச் சந்தையின் சில பகுதிகளை அவசரமாக புனரமைப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் உள்ளிட்ட அதிகாரிகள் சகிதம் இன்று (09) கல்முனை பொதுச் சந்தைக்கு சென்ற மாநகர மேயர், அவசரமாக புனரமைப்பு செய்ய வேண்டிய பகுதிகளை அடையாளப்படுத்தி, அதற்கான அறிவுறுத்தல்களையும் தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.
இப்புனரமைப்பு நடவடிக்கையின்போது, குறித்த சில பகுதிகளின் கூரைகள் திருத்தியமைக்கப்படவுள்ளதுடன், சில பகுதிகளின் கட்டுமானங்கள் அகற்றப்பட்டு, புதிய கடை அறைகள் அமைக்கப்படவுள்ளன.
அத்துடன், சேதமடைந்து காணப்படுகின்ற உள்ளக வடிகான்களும் புனரமைப்புச் செய்யப்படவுள்ளன.
இப்புனரமைப்பு வேலைகளுக்கான மதிப்பீடுகளை உடனடியாக மேற்கொண்டு, அடுத்த இரு வாரங்களில் பணிகளை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மாநகர மேயர், சம்மந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்தார்.
இதன்போது புனரமைப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுச் சந்தை வர்த்தகர்களுக்கு தெளிவுபடுத்திய மாநகர மேயர், இப்பணிக்கு வர்த்தகர்கள் அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், நகர திட்டமிடல், நீர்வழங்கல் அமைச்சராக பதவி வகித்தபோது அந்த அமைச்சு மூலம் இப்பொதுச்சந்தையின் மீள்நிர்மாணத்திற்காக பெருந்தொகை நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும், சந்தை வியாபார நடவடிக்கைகளை ஒட்டுமொத்தமாக வேறிடத்திற்கு மாற்றுவதில் நிலவி வந்த இழுபறி காரணமாக குறித்த காலப்பகுதியில் அவ்வேலைத் திட்டத்தை மேற்கொள்ள முடியாமல் போயிருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையில் வர்த்தகர்களினதும் பொது மக்களினதும் அசௌகரியங்களை கருத்தில்கொண்டு, மிகப்பாரிய இப்பொதுச் சந்தையை மாநகர சபை நிதியத்தின் மூலம் பகுதி பகுதியாகவேனும் முடிந்தளவு புனரமைப்பு செய்வதற்கு அவதானம் செலுத்தியுள்ளோம் என்று மாநகர மேயர் மேலும் தெரிவித்தார்.
10 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
58 minute ago
1 hours ago