Freelancer / 2023 மே 24 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூறுல் ஹுதா உமர்
அகில இலங்கை சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் உப தலைவராக நிந்தவூர் பிரதேச செயலக தலைமைப் பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சீ.அன்வர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இவர், கடந்த 2ஆம் திகதி நடைபெற்ற அகில இலங்கை சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் 26ஆவது தேசிய மாநாட்டிலேயே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சமுர்த்தி முகமையாளர் ஏ.சீ.அன்வர், பத்தரமுல்லை யிலுள்ள அகில இலங்கை சமுர்த்தி முகாமையாளர்கள் சங்க தலைமைக் காரியாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்ற முதலாவது நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.
ஏ.சீ.அன்வர், அம்பாறை மாவட்ட தமிழ் பேசும் சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் தலைவராக செயற்பட்டு வருவதுடன், தனது சிறந்த தலைமையினூடாக சமுர்த்தி முகாமையாளர் களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
சிரேஷ்ட சமுர்த்தி முகமையாளர் ஏ.சீ.அன்வர் தனது 29 வருட கால சேவையினுள் அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது மற்றும் நிந்தவூர் பிரதேச செயலக தலைமைப் பீட சமுர்த்தி முகமையாளராக கடமையாற்றியுள்ளார். (N)
4 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Oct 2025