Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
எஸ்.கார்த்திகேசு / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
“நாட்டில் நிலவுகின்ற ஒழுக்கமற்ற செயற்பாடுகள் மற்றும் சட்டவிரோத செயல்களை முற்றாகத் தடுத்து கிராமங்கள் தோறும் அமையான ஒழுக்கமான வாழ்கை முறைறை ஏற்படுத்த வேண்டுமானால், பொலிஸாரல் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் பூரண ஒத்தழைப்புகள் அவசியம்” என, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர அவர்கள் தெரிவித்தார்.
அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எஸ்.கே.பண்டாற அவர்களின் தலைமையில் விநாயகபுரம் கிராமத்தில் இடம்பெற்ற நிகழ்வென்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்படி தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“கிராமங்களின் அமைதிக்காக பொலிஸார் தங்களின் பணிகளை நிறைவாக மேற்கொண்டு வருகின்றனர்.
“எனினும், சிறுவர் துஷ்ப்பிரயோகம், பாலியல் வன்முறைகள், கொலை, கொள்ளை பொதைப்பொருள் பயன்பாடு, சட்டவிரோத கடன்கள் என சமூதாயத்தின் அமைதியை இல்லாமற் செய்யும் அநீதியான பல சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
“இவைகளை முற்றாக ஒழித்து, மக்கள் அச்சமின்றி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமானால், பொலிஸாருடன் பொதுமக்களும் ஒன்றிணைந்து செயலாற்ற வெண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
48 minute ago
2 hours ago
5 hours ago