2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

சமையல் எரிவாயு சிலிண்டர் திருட்டில் ஈடுபட்டவர் கைது

Janu   / 2025 ஜனவரி 06 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீடொன்றில் இருந்து சூட்சுமமான முறையில் சமையல் எரிவாயு சிலிண்டர் திருடிச் சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஸ் ஸாலிஹாத் மகளிர் அரபுக் கல்லூரி பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இதன் போது குறித்த சமையல் எரிவாயு சிலிண்டர் திருடிய   சந்தேக நபரை 24 மணித்தியாலத்திற்குள்  பொதுமக்களின் உதவியுடன்    சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்மாந்துறை  செந்நெல் கிராமம் பகுதியை சேர்ந்த 21 சந்தேக நபரை தடுத்து வைத்து   மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாறுக் ஷிஹான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .