Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 23 , பி.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
யாராவது சென்று தொழில் வாய்ப்பினையோ அல்லது பாதை அபிவிருத்தி தொடர்பாகவோ பேசினால், அது முடியாத காரியம் என சம்பந்தன் ஐயா கூறுவாரென தெரிவித்த நாமல் ராஜபக்ஷ எம்.பி, அவ்வாறு பெற்றுத்தந்தால் அரசியல் தீர்வினைப் பெற முடியாது எனக் கூறுவார் என்றும் தெரிவித்தார். .
1983 முதல் சம்பந்தன் ஐயா தீபாவளியைக் காத்திருக்கின்றார். ஒரே கதை.ஒரே பேச்சு. ஒரே புகைப்படம். அன்று முதல் தீபாவளிக்கு முன்னர் தமிழ் மக்களுக்கானத் தீர்வு என்றே சொல்லியே காலத்தைக் கடத்தி வருகின்றார். வட,கிழக்கு மக்களுக்கு இதுவரையில் அவ்வாறு எந்தவித நன்மையும் இதுவரையில் கிடைத்ததாக இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்துக்கு வருகை தந்த அவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவின் அழைப்பின் பேரில் அக்கரைப்பற்றுக்கு நேற்றிரவு(22)வருகை தந்தார். இவர், பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
சம்பந்தனும் சுமந்திரன் உள்ளிட்டவர்களும் வாகனத்துக்கான பேமிட்டையும் மதுபான சாலைக்கான அனுமதியையும் அரசிடம் பெற்றுக்கொள்வார். மக்கள் நன்மை சார்ந்த விடயங்களைப் பெற்றுக்கொள்வதில்லை. இதனால், விசேடமாக கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் கிழக்கு மாகாணம் பற்றி அதிகம் பேசுவதில்லை என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago