Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளருமான வெ.ஜெயச்சந்திரன், தனது உபதவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு, மக்கள் வாக்குகள் மூலம் நேரடியாகத்தெரிவான வளத்தாப்பிட்டியைச் சேர்ந்த வெ.ஜெயச்சந்திரன், இரண்டாண்டு காலமாக கட்சித் தீர்மானத்துக்கமைவாக உப தவிசாளராகச் செயற்பட்டு வந்தார்.
கட்சியுடன் செய்துகொண்ட உடன்படிக்கை காரணமாக, அவர் நேற்று தனது உப தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்து, சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளருக்கு எழுத்துமூலம் கடிதம் சமர்ப்பித்துள்ளார்.
தொடர்ந்து உறுப்பினர் பதவியை வகிக்கும் அதேவேளை, உப தவிசாளர் பதவியை மற்றுமொரு ஸ்ரீல.சு.கட்சி உறுப்பினர் எ.அச்சுமொகமட்டுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுள்ளார்.
அதன் பிரதிகள், உள்ளூராட்சி ஆணையாளர், தேர்தல் ஆணையாளர், கட்சிச் செயலாளர் உள்ளிட்டோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
சு.கட்சி அமைப்பாளரான ஜெயச்சந்திரன் தனது இருவருடகாலத்தில் 8கோடிக்கும் அதிகமான நிதியைக்கொணர்ந்து பல அபிவிருத்தித்திட்டங்களை செய்து மக்கள் நன்மதிப்பை பெற்றுள்ளவரென்பது குறிப்பிடத்தக்கது.
42 minute ago
52 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
52 minute ago
55 minute ago