2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சர்வதேச ஆய்வு மாநாடு

Editorial   / 2019 டிசெம்பர் 12 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம். ஹனீபா

இலங்கை, தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள், அரபுமொழி  பீடத்தின் 6ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு, ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள், அரபுமொழி பீடக்  கேட்போர் கூடத்தில்  இன்று (12) நடைபெற்றது.  

“தேசிய அபிவிருத்திக்கு இஸ்லாமியக் கற்கைகள். அரபு மொழி என்பவற்றின் சமகால வகிபாகம்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த ஆய்வரங்கு,  இஸ்லாமியக் கற்கைகள், அரபுமொழி பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.எம்.மசாஹிர் தலைமையில் நடைபெற்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம், பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட  இவ்வாய்வு மாநாட்டில், மாலைதீவு  பல்கலைக்கழகத்தின் உபவேந்தா் கலாநிதி இப்றாஹீம் ஸக்கரியா மூாஸா  பிரதம பேச்சாளராகக் கலந்துகொண்டார்.

சர்வதேச இவ் ஆய்வரங்கு மாநாட்டில் பொருளாதாரம், அரசியல், தொழில்நுட்பம், கலை, கலாசாரங்கள், சூழல் பாதுகாப்பு, சனத்தொகை பரம்பல் உள்ளிட்ட 140க்கும் மேற்பட்ட  ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. 

வெளிநாட்டு உள்நாட்டு ஆய்வாளர்கள் பலரும் கலந்துகொண்டு தமது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்திரந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .