வி.சுகிர்தகுமார் / 2019 ஒக்டோபர் 20 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

இனங்களிடையே சமாதானத்தை நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் பல்வேறு செயற்பாடுகளை, இலங்கை தேசிய சமாதான பேரவை தேசிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றது.
இதற்கமைவாக, சர்வமதக் குழுக்களின் பரஸ்பர விஜயங்களையும் அனுபவப் பகர்வுகளையும் ஏற்பாடு செய்து நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக அம்பாறை - அட்டாளைச்சேனை சர்வமதக் குழுக்களின் பிரதிநிதிகளை, மாத்தறை - வெலிகம பிரதேசத்துக்கு அழைத்துச் சென்று அங்குள்ள சர்வமதக் குழுக்களின் பிரதிநிதிகளோடு, கலந்துரையாடல்களை மேற்கொள்ளச் செய்தது.
மூன்று நாள்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இவ்விஜயத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள், தேசிய சமாதான பேரவையின் செயற்றிட்ட முகாமையாளர் நிசாந்தகுமார தலைமையில், வெலிகம தனியார் ஹோட்டலொன்றில் நேற்று (19) நடைபெற்றது.
15 minute ago
17 minute ago
38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
17 minute ago
38 minute ago
1 hours ago