Editorial / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஆஷிப்
ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில், சாய்ந்தமருது பிரதேசத்தின் அபிவிருத்தி மிகவும் பின்னிலையில் இருப்பது கவலையளிக்கிறது என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அக்கட்சியின் அம்பாறை மாவட்டப் பொருளாளருமான ஏ.சி.யஹ்யாகான் தெரிவித்தார்.
தேவையுடைய சிலருக்கு வீடு திருத்துவதற்காகவும் மின்சாரம், குடிநீர் இணைப்பைப் பெறுவதற்காகவும் உதவிகள் வழங்கும் நிகழ்வு, சாய்ந்தமருதில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில், நேற்று (01) நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றியபோதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; "சாய்ந்தமருது பிரதேசத்தில் பல பாடசாலைகளும் வீதிகளும் அபிவிருத்திக்காக ஏங்கிக் கொண்டிருப்பதாகவும் இப்பிரதேசத்தின் தோணா, சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாகக் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
நாட்டின் நாலா புறத்திலும் அரசாங்கத்தால் பல்வேறு வீட்டுத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் சாய்ந்தமருதில் பலர் வீடின்றிக் கஷ்டப்படுகின்றனர் எனவும் எதிர்காலத்தில் இவை சமூகப் பிரச்சினைகளாக மாறுவதற்கு வாய்ப்புள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
ஆகையால், சாய்ந்தமருது பிரதேசத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி விடயங்களில் அனைவரும் ஒன்றிணைந்து கவனம் செலுத்த முன்வர வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.
35 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
3 hours ago